< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கலவரம் எதிரொலி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிரடி மாற்றம்
|21 March 2023 4:32 PM IST
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை,
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.
அப்போது ஓ. பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் சுமார் 200 பேருடன் அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
மேலும், இந்த கலவரத்தின் போது அலுவலகம் சூறையாடப்பட்டதோடு சில ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக கடந்த 8 மாத காலம் அதிமுக அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அலுவலகத்தில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அலுவலகத்தின் 4 தளங்கள் மற்றும் வெளிப்புறம் என அனைத்து பகுதிகளிலும் இவை பொருத்தப்பட்டுள்ளன.