ரிமால் புயல் எதிரொலி - மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானம் ரத்து
|விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.
சென்னை,
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் தினமும் விமான சேவை வழங்கி வருகிறது. வங்கக் கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டி உள்ள கிழக்கு மத்திய கடற்கரையில் புயல் கடப்பதால் மேலும் ரிமால் புயல் தீவிரமாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மதுரையில் இருந்து 12.00 மணிக்கு துபாய் செல்வதற்காக 70 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முன்னேறிவிப்பு எதுவும் கொடுக்காமல், பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தவுடன் விமான சேவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மேலும், ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பயணிகளின் வாக்குவாதத்தினால் பயணிகளின் பயண திட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் மாற்றம் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.