< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
தகவல் அறியும் உரிமை சட்ட தின விழா
|14 Oct 2023 2:15 AM IST
மஞ்சூர் அரசு பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட தின விழா நடைபெற்றது.
ஊட்டியை அடுத்த மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட தின விழா நடைபெற்றது. இதற்கு பாக்கோரை பள்ளி ஆசிரியர் பீமன் முன்னிலை வகித்தார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கலந்துகொண்டு பேசினார். இதில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை, துணை தலைவர் சுப்பிரமணியம், ஆசிரியை கிரண், லட்சுமி நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக குந்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் போன்ற சட்டங்கள் குறித்து விளக்கினார்.