< Back
மாநில செய்திகள்
நெய்வேலியில்தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
கடலூர்
மாநில செய்திகள்

நெய்வேலியில்தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

நெய்வேலியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜோன் அலெக்ஸியஸ் மேரி வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக என்.எல்.சி. நிறுவன பொதுமேலாளர் அசோக்குமார், என்.எல்.சி. நிறுவனத்தின் போக்குவரத்து துறை மேலாளர் அருள்அழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அலுவலர்கள் பாலமுருகன், சசிகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்