< Back
மாநில செய்திகள்
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
9 Oct 2023 1:31 AM IST

திசையன்விளையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திசையன்விளை:

திசையன்விளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தீயணைப்பு நிலையம் முன்பு இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெட்டும் பெருமாள் முன்னிலை வகித்தார். திசையன்விளை தீயணைப்பு அலுவலர் ராஜா வரவேற்றார்.

மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று திசையன்விளை காமராஜர் பஸ்நிலையத்தை அடைந்தது. அங்கு நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வள்ளியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன், நாங்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் பாபநாசம் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

மேலும் செய்திகள்