< Back
மாநில செய்திகள்
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பிரசாரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பிரசாரம்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:15 AM IST

குடவாசலில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பிரசாரம்

குடவாசல்:

குடவாசலில் தீயணைப்பு நிலையம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பிரசாரம், மாரத்தான் ஓட்டம், வினாடி-வினா உள்ளிட்டவை நடந்தது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிபாசு தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஊர்வலம் அகரஓகை, குடவாசல் பஸ் நிலையம், கடைவீதி, திருக்குளம், அண்ணா வடக்கு, கிழக்கு, தெற்கு வீதி வழியாக தீயணைப்பு நிலையத்தை அடைந்தது. முடிவில் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் பரிசுகளை வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்