< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சிவன்-பார்வதி வீதி உலா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சிவன்-பார்வதி வீதி உலா

தினத்தந்தி
|
18 July 2023 12:16 AM IST

மோட்டார் சைக்கிளில் சிவன்-பார்வதி வீதி உலா நடைபெற்றது.

குன்னம்:

பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரியம்மன் உள்ளிட்ட 10 சாமிகளின் வீதி உலா நடைபெற்றது.

இதையொட்டி வாணவேடிக்கையுடன் 10 டிராக்டர்களில் சிறப்பு அலங்காரத்தில் எலி வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், கையேந்தியில் பெருமாள், மோட்டார் சைக்கிளில் சிவன்-பார்வதி, அன்ன வாகனத்தில் ஆண்டாள், சிம்ம வாகனத்தில் காளியம்மன், சரஸ்வதி, மீனாட்சி, ராஜேஸ்வரி எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. இதில் மோட்டார் சைக்கிளை சிவன் ஓட்டுவது போலவும், பின்னால் பார்வதி அமர்ந்து வருவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்