< Back
மாநில செய்திகள்
முப்போகம் விளைந்த தமிழகத்தில் ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது - மதுரை ஐகோர்ட்டு கிளை வேதனை
மாநில செய்திகள்

'முப்போகம் விளைந்த தமிழகத்தில் ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது' - மதுரை ஐகோர்ட்டு கிளை வேதனை

தினத்தந்தி
|
10 Nov 2023 3:14 PM GMT

அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

2024-ம் ஆண்டுக்கான குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான டெண்டரை இறுதி செய்ய உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் முன்பு முப்போகம் விளைந்தது, ஆனால் தற்போது ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகள் விஷயத்தில் மிகவும் கடுமை காட்ட வேண்டாம் எனவும், அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் ராபி பருவம் மற்றும் காரிப் பருவம் எந்த மாதம் தொடங்குகிறது, எந்த மாதம் முடிவடைகிறது என்பது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்ய மத்திய வேளாண் துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்