< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
|16 Jun 2022 5:37 PM IST
பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூரில் இருந்து விழுப்புரத்துக்கு பொது வினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலமாக திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் ஏற்றினர். இதையடுத்து 1,250 டன் அரிசியுடன் சரக்கு ரெயில் விழுப்புரம் புறப்பட்டு சென்றது.