நெல்லை ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ள அரிசிக்கொம்பன் யானை..!
|நெல்லை ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் அரிசிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ளது.
நெல்லை,
கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் கடந்த ஜூன் மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.
அப்பர் கோதையாறு பகுதியில் அரிசி கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்த பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அரிசிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மாஞ்சோலை அருகே உள்ள ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் அரிசிக்கொம்பன் யானை தற்போது முகாமிட்டுள்ளது. இந்த யானை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதவாறு கழுத்தில் உள்ள ரேடர் கருவி மூலம் 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தேயிலை தோட்ட பகுதியில் யானை முகாமிட்டிருப்பதால் மக்கள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.