< Back
மாநில செய்திகள்
காவிரியில் நீர் பங்கீடுக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

காவிரியில் நீர் பங்கீடுக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
21 Aug 2023 11:37 PM IST

காவிரியில் நீர் பங்கீடுக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நல்லசாமி வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், "தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரியில் நதிநீரை மாதாந்திர பங்கீடு தீர்ப்புக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தினந்தோறும் நீர் பங்கீடு அடிப்படையில் தீர்ப்பு இடம்பெற வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வெங்காயத்திற்கு ஏற்றுமதிக்கான வரி விதிப்பை நீக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு அளிக்க முக்கியத்துவம் கொடுப்பதை போல காவிரி பிரச்சினைக்கு தமிழக அரசு கொடுக்கவில்லை. வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும்'' என்றார்.

மேலும் செய்திகள்