< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
|27 Nov 2022 12:29 AM IST
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு குறித்து முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அலுவலர்களுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் சிப்காட் தொழில் பூங்கா அமையும் இடத்தை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.