< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை

தினத்தந்தி
|
3 Aug 2023 12:15 AM IST

வாணாபுரம் தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன

வாணாபுரம்

வாணாபுரம் தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் வாணாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) ராஜவேல் தலைமை தாங்கினார். தாசில்தார் குமரன், துணை தாசில்தார்கள் சரவணன், கங்காலட்சுமி, கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து அதில் தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பதிவு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்