< Back
மாநில செய்திகள்
துணை போலீஸ் சூப்பிரண்டு- இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

துணை போலீஸ் சூப்பிரண்டு- இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம்

தினத்தந்தி
|
16 July 2022 10:27 PM IST

தூத்துக்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு- இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ், குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் கலாலட்சுமி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ், கோவில்பட்டி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் கமலவாசன், தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் உள்பட பல போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்