< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் தலைமையில் 17, 18-ந்தேதிகளில் 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் தலைமையில் 17, 18-ந்தேதிகளில் 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம்

தினத்தந்தி
|
13 Oct 2023 10:47 PM IST

மறைமலைநகரில் முதல்-அமைச்சர் தலைமையில் 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முதல்-அமைச்சர் தலைமையில் 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் 28 துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.

மேலும் செய்திகள்