< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்: வைரல் வீடியோ..!
|26 Oct 2023 2:53 PM IST
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை,
எப்போதும் தனது உடல்நலனில் அக்கறையுடன் செயல்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை தவறாமல் செய்து வருபவர்.
இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று, ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு, "வாழ்க்கையில முன்னோக்கித்தான் போகணும்...வாக்கிங்ல பின்னோக்கியும் போகலாம் தானே..." எனப் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனை சந்தித்து நலம் விசாரித்தார்.