< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
|14 Jun 2022 8:11 AM IST
மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதனையடுத்து நேற்று செய்யூர் தாசில்தார் சகுந்தலா, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து, துணை வட்டாட்சியர் முத்து மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் துறையினர் மற்றும் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் நேற்று சோத்துப்பாக்கம் மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.