< Back
மாநில செய்திகள்
வாணவெடி தயாரிப்பு கிடங்குகளில் வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

வாணவெடி தயாரிப்பு கிடங்குகளில் வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
10 Oct 2023 6:45 PM GMT

குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் வாணவெடி தயாரிப்பு கிடங்குகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

குத்தாலம்:

வருவாய் அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மூவலூர், திருவாலங்காட்டில் உள்ள 4 நாட்டு மருந்து வெடிகள் மற்றும் வாணவெடி கிடங்கு மற்றும் தயாரிப்பு செய்யப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து நாட்டு வெடி தயாரிக்கப்படும் வெடி கடைகள் மற்றும் தயாரிப்பு நிலையங்களில் உள்ள வெடி மருந்துகள் மற்றும் பட்டாசுகளின் தரம், எடை உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து வெடிக்கடை உரிமையாளர்களிடம் வெடிகள் தயாரிக்கப்படும் இடங்களில் கதவுகள் மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அலுமினிய வாளிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெடி மருந்துகள் உள்ள அறையில் மின்சாரம் இருக்கக் கூடாது.

போலீஸ் துறைக்கு தகவல்...

வாடிக்கையாளர்கள் தேவைக்கு அதிகமான பட்டாசுகளை வாங்கினால் உடனடியாக போலீஸ் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பு உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா,மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், குத்தாலம் தாசில்தார் இந்துமதி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சீனிவாசன், ரமேஷ், குத்தாலம் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன்,கிராம நிர்வாக அலுவலர் சுருளிவேல், குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜராஜவர்மா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்