< Back
மாநில செய்திகள்
வருவாய் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வருவாய் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தினத்தந்தி
|
16 March 2023 8:11 PM GMT

வருவாய் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ரூ.500 லஞ்சம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள காரசுரம்பட்டியை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவர் இலுப்பூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக கடந்த 2009-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்ப படிவத்தை தாசில்தாருக்கு பரிந்துரை செய்து அனுப்ப, அங்கு தனி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சுப்பையா, பச்சைமுத்துவிடம் ரூ.500 லஞ்சம் வாங்கினார். அப்போது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சுப்பையாவுக்கு 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, இதனை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார். அதன்படி சுப்பையா 5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட சுப்பையாவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்