< Back
மாநில செய்திகள்
வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
திருச்சி
மாநில செய்திகள்

வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

தினத்தந்தி
|
6 Oct 2023 2:38 AM IST

வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.

திருச்சி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில் நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நீளம் தாண்டுதலில் செயிண்ட் ஜேம்ஸ் பள்ளி மாணவி கிருபாலட்சுமி முதலிடத்தை பிடித்தார். 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் உயரம் தாண்டுதலில் பாய்லர் ஆலை பள்ளி மாணவர் கேசவசந்திரன் தங்கம் வென்றார்.

19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஈட்டி எறிதலில் சஞ்சனாவும், அதே வயதுக்கு உட்பட்ட பெண்கள் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கண்ணுடையான்பட்டி அரசு பள்ளி மாணவி ரூபாஸ்ரீயும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் குண்டு எறிதலில் பூங்குடி அரசுப்பள்ளி மாணவர் மனோஜும், 14 வயதுக்கு உட்பட்ட குண்டு எறிதலில் அலகரை அரசுப்பள்ளி மாணவர் அபிஷேக்கும் தங்கம் வென்றனர். முன்னதாக காலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்