< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கருப்பு பட்டைஅணிந்து பணியாற்றிய வருவாய்த்துறையினர்
|18 Aug 2023 12:08 AM IST
கருப்பு பட்டைஅணிந்து வருவாய்த்துறையினர் பணியாற்றியனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கிளைகளிலும் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டையை கருப்பு பட்டையாக அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை அலுவலகங்களில் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.