< Back
மாநில செய்திகள்
பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு
விருதுநகர்
மாநில செய்திகள்

பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு

தினத்தந்தி
|
21 Oct 2023 5:25 AM IST

வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையத்தில் சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டு அந்த கடையின் பின்புறம் கிப்ட் பாக்ஸ் போட்டுக்கொண்டிருந்த 12 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தாசில்தார்கள் அய்யாகுட்டி, சிவக்குமார், மாதா, சாந்தி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக 4 சிறப்பு குழுவினை அமைத்துள்ளது.


இந்த சிறப்புக்குழு மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் வெம்பக்கோட்டை, வனமூர்திலிங்காபுரம், தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், துலுக்கன்குறிச்சி, சல்வார் பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், மண்டல துணை வட்டாட்சியர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராமராஜ், சீனிராஜ், மனோகரன் ஆகியோர் ஈடுபட்டனர். பட்டாசு கடைகளில் அரசு அனுமதித்தவாறு பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா? விற்பனையில் விதிமுறை மீறல் உள்ளதா? என அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்