திருவண்ணாமலை
வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
|போளூரில் வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
போளூர்
வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் போளூரில் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும், போளூர் தாசில்தாருமான அ.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆனந்த குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் மஞ்சுளா வரவேற்றார்
.இணை செயலாளர் கவுரி சிறப்புரையாற்றினார். சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு இறுதியாக வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் திருத்திய தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பட்டியலின் படி பணியிடம் வழங்கப்பட வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் முதல் தாசில்தார் நிலை வரை ஒரே அலுவலகத்திலேயே பணிபுரிந்து வருவதை தவிர்க்கும் வகையில், மாவட்ட வருவாய் அலகில் உள்ள எல்லா வருவாய் அலுவலகங்களிலும் உள்ள பணியிடங்களில் சுழற்சி முறையில் அனைவரும் பணிபுரியும் வகையில் மாறுதல் வழங்கப்பட வேண்டும்.
தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பட்டியல் உரிய காலத்தில் வெளியிட ஆவன செய்ய வேண்டும்.
பெண் ஊழியர்கள் தங்களது அரசு பணியை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு அருகாமையில் உள்ள வருவாய் வட்டங்களில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.