< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 Jun 2022 1:08 AM IST

திருச்சியில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி, ஜூன்.21-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நலச்சங்க மாநில பேரவையின் சார்பில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் சங்க் செயலாளர் கே.சம்பத் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மண்டலத்தலைவர் என்.மணி, துணைத்தலைவர்கள் என்.எம்.ரெங்கராஜ், என்.தியாகராஜன், பொருளாளர் கே.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் ஜே.லெட்சுமணன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 77 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் ஓய்வூதிய பஞ்சப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மருத்துவ படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்