< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
|20 Oct 2023 12:15 AM IST
சங்கராபுரத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்கராபுரத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், மருத்துவ காப்பீடு திட்டத்தில உள்ள குறைகளை போக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சங்கராபுரத்தில் வருகிற 31-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தலைவர் கலியமூர்த்தி, நிர்வாகிகள் அன்பரசு, அருளப்பன், பரணபாஸ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.