< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
7 Oct 2023 1:45 AM IST

கோவையில் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்

கோவை போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் (வயது 61). கோவை மாநகர போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ், முபாரக், கோவையை சேர்ந்த ரியாஸ், திருப்பூரை சேர்ந்த ஷபீக் ஆகியோர் வர்த்தக முதலீட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.

இதை உண்மை என்று நம்பிய அப்துல் ரஷீத், அவர்களிடம் ரூ.8 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், வர்த்தகத்தில் முதலீடு செய்து லாப தொகையை வழங்கவில்ைல. மேலும் அசல் தொகைையயும் திரும்ப கொடுக்கவில்லை.

4 பேர் மீது வழக்கு

இதனால் ஏமாற்றமடைந்த அப்துல் ரஷீத், அவர்களிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு பலமுறை கேட்டார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அப்துல் ரஷீத், கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அப்பாஸ், முபாரக், ரியாஸ் மற்றும் ஷபீக் ஆகிய 4 பேர் மீது மோசடி சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்