< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
|8 Dec 2022 12:15 AM IST
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வட்டாரக் கூட்டம் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நல்லாசிரியர் வெண்பாவூர் சுந்தரம், பூலாம்பாடி வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சையத் பாஷா ஜான் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நாளில் மாநில அரசும் அகவிலை படியை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மருத்துவ படி ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும். 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 17-ந் தேதியை ஓய்வூதியர் தினமாக அறிவித்து அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார அளவிலான ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார்.