< Back
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
கரூர்
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2023 11:18 PM IST

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

கரூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிவகொழுந்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவசங்கரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு உதவ வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு விழா முன்பணம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு குடும்ப நலநிதியை ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி உதவ வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பொங்கல் கொடையை ஏ.பி., மற்றும் சி.டி. வேறுபாடு கருதாமல் அனைவருக்கும் தந்து உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர் கருப்பண்ணன், பொருளாளர் கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்