< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

தினத்தந்தி
|
19 July 2023 12:15 AM IST

சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

சங்கராபுரம்,

சங்கராபுரம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டத்தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் நாராயணசாமி, துணை தலைவர்கள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, தணிக்கையாளர்கள் வேங்கட நாராயணன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதியழகன் வரவேற்றார். கூட்டத்தில் சங்க வளர்ச்சி குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பொருளாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் பழனி, நிர்வாகிகள் ஹாஷிம், ரகுநந்தன், குணசேகரன், அன்பழகன், வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்