திருச்சி
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியதை மீண்டும் வழங்க வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், துரை ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் தங்கவேலு, மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னதாக வடக்கு மாவட்ட பொருளாளர் துரைசாமி வரவேற்றார். முடிவில் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.