< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற ஊழியர் ரெயில் மோதி பலி
|4 Oct 2023 11:42 PM IST
வாணியம்பாடி அருகே ஓய்வுபெற்ற ஊழியர் ரெயில் மோதி பலியானார்.
நாட்டறம்பள்ளி தாலுகா பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 58), ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவர் நேற்று காலை வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்ல கேத்தாண்டப்பட்டி- வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே புத்துக்கோவில் அருகே தண்டவாளத்தை கடந்தார். அப்போது அந்தவழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.