< Back
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்  பஸ் மோதி பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலி

தினத்தந்தி
|
5 July 2023 12:26 AM IST

விராலிமலையில் ஆம்னி பஸ் மோதி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பலியானார்.

விராலிமலை அருண்கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 73). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர், நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது மொபட்டில் வீட்டிலிருந்து அருண்கார்டன் அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக முத்து ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்