< Back
தமிழக செய்திகள்
தீக்குளிக்க முயன்ற ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி
விருதுநகர்
தமிழக செய்திகள்

தீக்குளிக்க முயன்ற ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி

தினத்தந்தி
|
23 May 2023 12:15 AM IST

தீக்குளிக்க முயன்ற ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி

சென்னை அசோக் நகர் மாந்தோப்பு காலனியில் வசிப்பவர் சின்னத்தம்பி(வயது 78). இவரது சொந்த ஊர் இருக்கன்குடி. இவர் பள்ளிக்கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊரான இருக்கன்குடியில் இவருக்கு 3.5 சென்டில் வீடும், கடந்த 1983-ம் ஆண்டு வாங்கிய காலியிடமும் உள்ளது. இதனை இவரது மூத்த மகன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை மீட்டு தர கோரி மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே மனு கொடுத்த நிலையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த முதியவர் சின்னத்தம்பி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச் சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்