< Back
மாநில செய்திகள்
தனியார் பஸ் மோதி ஓய்வு பெற்ற டிரைவர் பலி - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை
மாநில செய்திகள்

தனியார் பஸ் மோதி ஓய்வு பெற்ற டிரைவர் பலி - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
27 Oct 2022 12:31 PM GMT

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற டிரைவர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, தனியார் பஸ் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் சாலை விபத்தில் ஓய்வு பெற்ற ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அதிவேகமாக பேருந்துகளை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே கோலியனூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 62). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று காலை 8.15 மணியளவில் கோலியனூரில் உள்ள ஒரு கோவில் எதிரே நடந்து சென்றவாறு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அதே திசையில் பின்னால் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்று, தட்சிணாமூர்த்தியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட எஸ்.பி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அதிவேகமாக பேருந்தை இயக்கிய 10 தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்