< Back
மாநில செய்திகள்
சுசீந்திரம் அருகே ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சுசீந்திரம் அருகே ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் தற்கொலை

தினத்தந்தி
|
10 Dec 2022 12:37 AM IST

சுசீந்திரம் அருகே ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே குலசேகரன்புதூர் அத்திகுளம் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர். இவருடைய மனைவி ஏஞ்சல் லதா குமாரி.

நேற்றுமுன்தினம் நாகேந்திரன் மதுகுடித்து விட்டு வீட்டுக்குள் வந்துள்ளார். இதனை மனைவி ஏஞ்சல் லதா குமாரி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நாகேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்