< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ரெத்தினவேல் கண்டியர் இல்ல திருமண விழா
|26 May 2023 1:03 AM IST
ரெத்தினவேல் கண்டியர் இல்ல திருமண விழா நடைபெற்றது.
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ரெத்தினவேல் கண்டியர் இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களான வெங்கடேஷ்-மோனிஷா ஆகியோரை வாழ்த்தினார். இதையடுத்து அவருக்கு பேனா நினைவு சின்னத்தை மணவீட்டார்கள் வழங்கினர். விழாவில் முதல் நிலை ஒப்பந்ததாரரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான ரெத்தினவேல் கண்டியர்-பிரகதா, ஆர்.எம்.நேத்ரா குழுமம் சென்னை மற்றும் கீழகரும்பிரான்கோட்டையை சேர்ந்த மேற்கு ஒன்றிய அமைப்பாளரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினருமான கே.எஸ். முத்து, அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், ரகுபதி, முத்துராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.