< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மன‌அழுத்தம் அதிகரிப்பு: பெற்றோர்கள் புகார்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

"நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மன‌அழுத்தம் அதிகரிப்பு": பெற்றோர்கள் புகார்

தினத்தந்தி
|
18 July 2022 12:57 AM IST

நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மன‌அழுத்தம் அதிகரிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நீட் தேர்வுக்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர்.இது குறித்து நீட் தேர்வு எழுதும் மாணவரின் தந்தை ஒருவர் கூறும்போது;

"நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு துப்பட்டா அணியவேண்டாம், பொட்டு இடவேண்டாம், காலணி அணியவேண்டாம் என அதிகபட்ச மன அழுத்தத்தை உருவாக்குவதனால், படித்த பாடங்கள் கூட மறக்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும், நீட் தேர்வுக்கான கால இடைவெளியானது மிகக்குறைவு. தேர்வுக்கான கால இடைவேளியை அதிகப்படுத்தினால் தான் தரமும் தகுதியும் மிக்க மாணவர்கள் மிகச்சிறந்த மருத்துவராக வர முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்