நாகப்பட்டினம்
ரூ.3¾ லட்சத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை
|தலைஞாயிறில் ரூ.3¾ லட்சத்தில் கட்டப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வு அறையை தூய்மை பணியாளரை கொண்டு கலெக்டர் திறக்க வைத்தார்.
வாய்மேடு:
தலைஞாயிறில் ரூ.3¾ லட்சத்தில் கட்டப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வு அறையை தூய்மை பணியாளரை கொண்டு கலெக்டர் திறக்க வைத்தார்.
ஓய்வு அறை திறப்பு விழா
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஒப்புதலுடன் தூ ய்மைப் பணியாளர்களுக்கு ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை கட்டிடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ், ஒரு தூய்மைப் பணியாளரை, ஓய்வறையை திறக்க வைத்தார்.
பல்வேறு வசதிகள்
இந்த ஓய்வு அறையில் உணவு உண்ண மேஜை, குடிநீர், வெந்நீர், கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பொழுது போக்கிற்காக கேரம் போர்டு, பல்லாங்குழி போன்ற விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட துணிப்பை தையல் பயிற்சி, காகித பை தயாரிப்பு பயிற்சி மற்றும் ஒயர் கூடைபயிற்சி அளிக்கப்படுகிறது. விழாவில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார் உள்பட பலர் கலந்து கொண்ட