< Back
மாநில செய்திகள்
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை

தினத்தந்தி
|
16 Aug 2022 12:08 AM IST

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஒரு சுதந்திர போராட்ட தியாகி உயிருடன் இருக்கிறார். அவர் ஆலத்தூர் தாலுகா, காரை கிழக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆவார். சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமியை கவுரவப்படுத்தும் விதமாக தாசில்தார் முத்துகுமார் தலைமையில் அலுவலர்கள் அவரின் வீட்டிற்கே நேரடியாக சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் சிலர் சுதந்திர தின விழா நடந்த இடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சென்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு வந்த குறைதீர்க்கும் கூட்டத்தை தற்போது நடைபெறாமல் உள்ளது. அதனை நடத்தவும், முன்பெல்லாம் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவிற்கு வீட்டிற்கு அழைப்பிதழ் வரும். தற்போது அழைப்பிதல் கிடைக்கவில்லை. அழைப்பிதழை சரியான முகவரிக்கு அனுப்புமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப்படங்களுக்கும் கலெக்டர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்