< Back
மாநில செய்திகள்
தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழாபாப்பாரப்பட்டி மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை
தர்மபுரி
மாநில செய்திகள்

தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழாபாப்பாரப்பட்டி மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
5 Oct 2023 1:00 AM IST

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாளையொட்டி பாப்பாரப்பட்டி உள்ள அவரது மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தர்மபுரி:

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாளையொட்டி பாப்பாரப்பட்டி உள்ள அவரது மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தியாகி சுப்பிரமணிய சிவா

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் மற்றும் நினைவுத்தூண் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் அவரது உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி, எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் தியாகி சுப்பிரமணிய சிவா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவிடத்தில் மரியாதை

பின்னர் மணிமண்டப வளாகத்தில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திலும் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, பென்னாகரம் தாசில்தார் சவுகத் அலி, ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி, ஒண்ணப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு அமைப்புகள்

இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பொதுமக்கள் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்