திண்டுக்கல்
திண்டுக்கல்லில் அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மரியாதை
|திண்டுக்கல்லில் அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கிருஷ்ணன் கோவில் அருகே சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு அ.தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். அப்போது அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தனபாலன், அழகுமுத்துகோன் பேரவை தலைவர் கார்த்திகேயன், யாதவ மகாசபை தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் லோகநாதன், செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் மாணவர் அணி செயலாளர் சின்னு, இளைஞரணி இணைச்செயலாளர் ரமேஷ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தங்கப்பாண்டியன், கிருஷ்ணன்கோவில் நிர்வாகிகள் சவுந்தரம், காளிதாஸ், பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.