< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விஷ சாராய பலி எதிரொலி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
|21 Jun 2024 12:21 AM IST
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு புதிய சூப்பிரண்டாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள விஷசாராயம் சாவு எதிரொலியாக, மது விலக்கு அமலாக்கப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டார். அவரது பொறுப்புகளை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருண் முழு பொறுப்புடன் கூடுதலாக கவனிப்பார். இதேபோல், மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் மாற்றப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு புதிய சூப்பிரண்டாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ்குமார் அகர்வாலுக்கும், செந்தில் குமாருக்கும் புதிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.