< Back
மாநில செய்திகள்
பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் - மக்கள் நீதி மய்யம் பாராட்டு
மாநில செய்திகள்

பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் - மக்கள் நீதி மய்யம் பாராட்டு

தினத்தந்தி
|
3 Oct 2022 5:12 PM IST

பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"காஞ்சிபுரம் பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

ஏற்கெனவே மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்களைப் பாராட்டுவதுடன், அத்தீர்மானம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

கிராமசபையின் வலிமையை மக்கள் புரிந்துகொண்டதுபோல, மத்திய, மாநில அரசுகளும் உணர்ந்து, அவர்களது கோரிக்கையை ஏற்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.


மேலும் செய்திகள்