< Back
மாநில செய்திகள்
என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்
மாநில செய்திகள்

என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

தினத்தந்தி
|
5 May 2023 9:55 PM IST

கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 5 கிராமங்களில் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, கடலூர் மாவட்டம் கத்தாழை, சின்ன நற்குணம், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, நெல்லி கொள்ளை ஆகிய 5 கிராமங்களில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மாற்றம் செய்து புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்