தர்மபுரி
வருகிற 26-ந் தேதி தர்மபுரிக்கு வருகை தரும்அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
|அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி:
வருகிற 26-ந் தேதி தர்மபுரிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர்கள் செல்வராஜ், மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். செந்தில் குமார் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தர்மசெல்வன், பி.சி.ஆர்.மனோகரன், சென்னகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாநில நிர்வாகிகள் கீரை விஸ்வநாதன், சூடப்பட்டி சுப்பிரமணி, செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி (கிழக்கு) பி.பழனியப்பன் (மேற்கு) ஆகியோர் தீர்மானங்கள் குறித்தும், வருகிற 26-ந் தேதி தர்மபுரிக்கு வருகை தரும் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்தும் விளக்கி பேசினர்.
உற்சாக வரவேற்பு
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தர்மபுரிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் இணைந்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் மணி, உமாசங்கர், ரேணுகாதேவி, ராஜகுமாரி, கிருஷ்ணகுமார், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் தங்கமணி, முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வக்கீல் அசோக்குமார், கலைச்செல்வன், செல்வராஜ், ராஜகோபால், கார்த்திக், முத்தமிழன், மகேஷ்குமார், ஹரிபிரசாத், கோடீஸ்வரன், நாசர், தங்கசெழியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு நன்றி கூறினார்.