< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கல்குவாரி அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
|19 April 2023 12:15 AM IST
ஓசூர் அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓசூர்
ஓசூர் அருகே கொத்தூர், தின்னூர் கிராமங்களுக்கு இடையே புதிதாக கல்குவாரி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற தனியார் நிறுவனத்தினர் மனு வழங்கியுள்ளனர். ஏற்கனவே இந்த கிராமங்களின் அருகில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வரும் நிலையில், அங்கு பாறைகளை தகர்க்க வைக்கப்படும் வெடிகளால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புதிய கல்குவாரி அமைக்கப்பட்டால் தங்களின் விவசாயம், தொழில் என வாழ்வாதாரம் பறிபோகும், எனவே புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.