< Back
மாநில செய்திகள்
வயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

வயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
17 Oct 2023 1:00 AM IST

மொரப்பூர் அருகே 4 வழிச்சாலைக்கு வயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே 4 வழிச்சாலைக்கு வயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 வழிச்சாலை

திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை, அரூர், மொரப்பூர், ஒடசல்பட்டி வழியாக தர்மபுரி வரை 4 வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை மொரப்பூர் வழியாக செல்லாமல் தம்பிசெட்டிப்பட்டி, எம்.வேட்ரப்பட்டி வழியாக தர்மபுரி மெயின் ரோட்டில் சென்றடையும் வகையில் விவசாய நிலங்கள் வழியாக புற வழிச்சாலை அமைக்க அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தம்பிசெட்டிபட்டி, எம்.வேட்ரப்பட்டி, நைனாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று மொரப்பூர் அருகே தம்பிசெட்டிப்பட்டியில் நிலம் அளவீடு செய்யும் செய்யும் இடத்தில் திரண்டனர். இதனால் நிலம் அளவீடு செய்யும் பணிக்காக வந்திருந்த அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.

200 குடும்பங்கள் பாதிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருவண்ணாமலையில் இருந்து தர்மபுரி நகரை இணைக்க நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி மொரப்பூர் அருகே உள்ள பனந்தோப்பு வரையிலும், மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டியில் இருந்து தர்மபுரி வரையிலும் நடைபெற்று வருகிறது.இதனால் சிறு, குறு, நடுத்தர விவசாய குடும்பங்களை சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே தமிழக அரசு புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு விட்டு பனந்தோப்பில் இருந்து மொரப்பூர் வழியாக சென்னம்பட்டி வரை 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்