< Back
மாநில செய்திகள்
வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா கடிதம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா கடிதம்

தினத்தந்தி
|
8 Aug 2023 1:30 AM IST

நாகையக்கோட்டை ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் நாகையக்கோட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான ஜெயக்குமார், வினோத்குமார், சுப்பிரமணி, காளீஸ்வரி, பாக்கியலட்சுமி ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் 5 பேரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கொடுத்த கடிதத்தில், நாகையக்கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகள் முறையாக தேர்வு செய்யப்படுவது இல்லை. குடிநீர் குழாய் பதிக்கும் விவரங்கள் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்படுவது இல்லை. மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. மக்கள் பணியை செய்ய முடியாத சூழலால், பதவியை ராஜினாமா செய்வதாக, கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்