< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
|19 May 2022 10:43 PM IST
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'உலகம் போற்றும் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே எனது காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கோவி சிற்றரசிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் எனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை தலைமைக்கு அனுப்பிவிட்டேன். என்னை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர் என்று கூறினார்.