திருவள்ளூர்
மெதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
|மெதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவதிப்படு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தின் கீழ் மெதூர் 11 கிலோ வாட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மெதூர், ஆசானபூதூர், அச்சரப்பள்ளம், பள்ளிக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதியில் இருக்கும் கிராமங்களில் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார்கள் மூலம் விவசாயிகள் பயிர்த்தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலைகளில் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மெதூர் பகுதியில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட மின்கம்பிகள் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவதிப்படு வருகின்றனர். எனவே ஆசானபுதூர், அச்சரப்பள்ளம், பள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மின்வழித்தட கம்பிகளை மாற்றி சீரான மின்விநியோகம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.